ஆயுஷ்
உலக எலும்புப்புரை தினம் 2025 - ஆயுர்வேதம் எலும்புகளை வலுப்படுத்தவும் உடையக்கூடிய தன்மையைத் தடுக்கவும் முழுமையான பாதைகளை வழங்குகிறது
Posted On:
19 OCT 2025 3:11PM by PIB Chennai
உலகம் உலக எலும்புப்புரை தினத்தைக் கடைப்பிடிக்கும் வேளையில், ஆயுஷ் அமைச்சகம் இந்தக் குறைபாட்டைப் போக்கும் வகையில் ஆரம்பகால தடுப்பு பராமரிப்பு மற்றும் வாழ்க்கை முறை தலையீடுகளின் முக்கிய தேவையை வலியுறுத்துகிறது. இது உலக அளவில் கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு அமைதியான ஆனால் பெரிய பொது சுகாதார சவாலாக மாறியுள்ளது. எலும்பு ஆரோக்கியம் மற்றும் எலும்புப்புரை போன்ற குறைபாடுகளுக்கு ஆயுர்வேதம் எவ்வாறு நிலையான, தடுப்பு மற்றும் மறுசீரமைப்பு தீர்வுகளை வழங்குகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எலும்புப்புரை நோய் எலும்புகளை பலவீனப்படுத்துவதுடன், அவை உடைந்து போகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் ஆகிறது. எலும்பு வலிமை மற்றும் அடர்த்தி இழப்பு காரணமாக இது காலப்போக்கில் மெதுவாக உருவாகிறது, மேலும் இது பெரும்பாலும் "அமைதியான நோய்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது பொதுவாக எலும்பு முறிவு ஏற்படும் வரை எந்த அறிகுறிகளையும் காட்டாது. பல சந்தர்ப்பங்களில், முதல் அறிகுறி எலும்பு முறிவு - பெரும்பாலும் இடுப்பு, மணிக்கட்டு அல்லது முதுகெலும்பில் ஏற்படும்.
ஆயுர்வேதத்தின்படி, இந்த நோய் முதன்மையாக வாத தோஷத்தின் வீரியத்துடன் தொடர்புடையது, இது எலும்பு வலிமையை பலவீனப்படுத்துகிறது மற்றும் எலும்பு அடர்த்தியைக் குறைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180847
***
AD/PKV/SH
(Release ID: 2180878)
Visitor Counter : 7