நிலக்கரி அமைச்சகம்
சிறப்பு பிரச்சாரம் 5.0 –ன் கீழ் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்துகிறது எஸ்இசிஎல்
Posted On:
19 OCT 2025 3:17PM by PIB Chennai
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு இணங்கவும், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நல்லாட்சியை மையமாகக் கொண்ட நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகள் தீர்வுத் துறையின் சிறப்பு பிரச்சாரம் 5.0-ன் ஒரு பகுதியாகவும், சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எஸ்இசிஎல்) 2025-ம் ஆண்டில் அதன் டிஜிட்டல் மாற்றப் பயணத்தை விரைவுபடுத்த பெரும் முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளது.
புதிய போர்டல்கள் மற்றும் பயன்பாடுகளின் வலுவான தொகுப்பு மூலம், எஸ்இசிஎல் நிறுவனத்தின் அனைத்து மட்டங்களிலும் செயல்பாட்டுத் திறன், பணியாளர் அதிகாரமளித்தல் மற்றும் வெளிப்படைத்தன்மையை மறுவரையறை செய்கிறது.
டிஜிட்டல் அமைப்புகளின் வெளியீடு, டிஜிட்டல்மயமாக்கல், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்முறை எளிமைப்படுத்தல் ஆகியவை முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளாக இருக்கும் சிறப்பு பிரச்சாரம் 5.0-ல், எஸ்இசிஎல்-லின் முன்னோடியான பங்கேற்பை பிரதிபலிக்கிறது.
***
AD/PKV/SH
(Release ID: 2180871)
Visitor Counter : 5