பாதுகாப்பு அமைச்சகம்
காவலர் நினைவு நாள்தேசிய காவல் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார் பாதுகாப்பு அமைச்சர்
Posted On:
18 OCT 2025 4:40PM by PIB Chennai
அக்டோபர் 21, காவலர் நினைவு நாள் அன்று, புதுதில்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். 1959-ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று, லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸில், அதிக ஆயுதம் ஏந்திய சீன துருப்புக்களின் தாக்குதலில் 10 வீரம் மிக்க போலீசார் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். அப்போதிருந்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 அன்று காவலர் நினைவு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் தில்லி காவல்துறையின் கூட்டு அணிவகுப்பு நடைபெறும். பாதுகாப்புத்துறை அமைச்சர், மத்திய உள்துறை இணையமைச்சர், காவல் பின்னணி கொண்ட எம்.பி.க்கள் உள்ளிட்டோர் மலர்வளையம் வைப்பார்கள். ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குநர்கள் , காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பிற பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
காவல்துறையினரின் தியாகங்களையும், தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் அவர்களின் முக்கிய பங்கையும் அங்கீகரிக்கும் விதமாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2018 -ம் ஆண்டு காவல்துறை நினைவு தினத்தன்று புதுதில்லியின் சாணக்கியபுரியில் உள்ள தேசிய காவல் நினைவுச்சின்னத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த அருங்காட்சியகம் இந்தியாவில் காவல் பணி குறித்த வரலாற்று கண்காட்சியாகக் கருதப்படுகிறது. திங்கட்கிழமைகள் தவிர அனைத்து நாட்களிலும் இது பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.
இந்த நினைவுச்சின்னம் காவல் படையினருக்கு தேசிய அடையாளம், பெருமை, நோக்கத்தின் ஒற்றுமை, பொதுவான வரலாறு மற்றும் விதி ஆகியவற்றின் உணர்வை அளிக்கிறது, மேலும் அவர்களின் உயிரைப் பணயம் வைத்தும் தேசத்தைப் பாதுகாப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
******
(Release ID: 2180723)
AD/PKV/SG
(Release ID: 2180790)
Visitor Counter : 8