பாதுகாப்பு அமைச்சகம்
மண்டல அளவிலான விநாடி - வினா சுற்றுப் போட்டிகள் நிறைவு
प्रविष्टि तिथि:
18 OCT 2025 9:53AM by PIB Chennai
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மதிப்பு வாய்ந்த இந்திய கடற்படை நடத்தும் சிந்தனை - 25 விநாடி - வினா போட்டிகளுக்கான மண்டல சுற்றுகள் அக்டோபர் 13 மற்றும் 14, ஆகிய தேதிகளில் நடைபெற்றன. மண்டலப் போட்டிகளில், நான்கு மண்டலங்களிலிருந்தும் (வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு) முன்னணி பெற்றுள்ள அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்காக கடுமையாகப் போராடின. ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும், முதல் நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. இது வரும் நவம்பர் 04, 2025 அன்று எழிமலாவில் உள்ள கடற்படை பயிற்சி நிறுவனமான இந்திய கடற்படை அகாடமியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 16 அணிகளில், எட்டு அணிகள் நவம்பர் 05, 2025 அன்று நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
அரையிறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ள மண்டல வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் விபரம் பின்வருமாறு: -
வடக்கு மண்டலம்:
1. டாக்டர் வீரேந்திர ஸ்வரூப் கல்வி மையம், கான்பூர் (உத்தரப் பிரதேசம்)
2. திவான் பப்ளிக் பள்ளி, மீரட் (உத்தரப் பிரதேசம்)
3. ஸ்பிரிங் டேல் சீனியர் பள்ளி, அமிர்தசரஸ் (பஞ்சாப்)
4. கேஎல் இன்டர்நேஷனல் பள்ளி, மீரட் (உத்தரப் பிரதேசம்)
கிழக்கு மண்டலம்
1. பிஎம் ஸ்ரீ ஜேஎன்வி, சமஸ்திபூர் (பீகார்)
2. சிக்ஷா நிகேதன் பள்ளி, கிழக்கு சிங்பும் (ஜார்க்கண்ட்)
3. டிஏவி பப்ளிக் பள்ளி, புவனேஸ்வர் (ஒடிசா)
4. சாந்த்ரகாச்சி கேதார்நாத் நிறுவனம், ஹவுரா (மேற்கு வங்கம்)
தெற்கு மண்டலம்
1. பத்மா சேஷாத்ரி பால பவன் சீனியர் செகண்டரி பள்ளி, சென்னை (தமிழ்நாடு)
2. வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி, சென்னை (தமிழ்நாடு)
3. சைனிக் பள்ளி, குடகு (கர்நாடகா)
4. பாரதிய வித்யா பவன், கண்ணூர் (கேரளா)
மேற்கு மண்டலம்
1. கேம்பிரிட்ஜ் கோர்ட் உயர்நிலைப் பள்ளி, ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்)
2. ஜெய்ஸ்ரீ பெரிவால் உயர்நிலைப் பள்ளி, ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்)
3. புனித அந்தோணி சீனியர் செகண்டரி பள்ளி, உதய்பூர் (ராஜஸ்தான்)
4. சுபோத் பப்ளிக் பள்ளி, ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்)
சிந்தனை - 25 என்ற பெயரில் "மஹாசாகர்" என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இந்த விநாடி - வினா போட்டிகள், அறிவுசார் பரிமாற்றம் மற்றும் போட்டிக்கான தளத்தை வழங்குகிறது. தகுதிவாய்ந்த பங்கேற்பாளர்கள் இந்திய கடற்படை அகாடெமியில் உள்ள அதிநவீன பயிற்சி வசதிகளைப் பார்வையிடும் தனித்துவ வாய்ப்பைப் பெறுவர். இந்த சவாலான வினாடி - வினா போட்டியின் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் இந்திய கடற்படை வாழ்த்து தெரிவித்துள்ளது.
******
(Release ID: 2180633)
AD/SV/SG
(रिलीज़ आईडी: 2180701)
आगंतुक पटल : 20