திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்தின் சிறப்பு பிரச்சாரம் 5.0-ன் முன்னேற்றங்கள்
प्रविष्टि तिथि:
17 OCT 2025 4:22PM by PIB Chennai
சிறப்புப் பிரச்சாரம் 5.0 இயக்கம் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 2 முதல் 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைதீர்க்கும் துறையின் கீழ், அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் அலுவலகங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. அரசு அலுவலகங்களில் தூய்மையை நிலைநிறுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள பொதுக் குறைபாடுகள் போன்றவற்றை அகற்றுவதே இதன் முக்கிய நோக்கம்.
திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் இப்பிரச்சாரத்தில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறது. 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 16 நிலவரப்படி, பொது குறைதீர்க்கும் வழக்குகளில் 79 சதவீதம் தீர்க்கப்பட்டுள்ளன. இலக்கு வைக்கப்பட்ட கோப்புகளில் 51 சதவீதம் அதாவது 634 பழைய கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, 1,900 தூய்மை இலக்குகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த அமைச்சகம் தனது நிலுவையில் உள்ள அனைத்து குறைகளையும் அக்டோபர் 31 என்ற காலக்கெடுவிற்கு முன்பே முடிப்பதில் தீவிரமாக செயல்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180352
***
AD/SE/SH
(रिलीज़ आईडी: 2180606)
आगंतुक पटल : 16