வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் விரைவுசக்தி திட்டத்தின் கீழ் உள்ள வலையமைப்பு திட்டமிடல் குழுவின் 100-வது கூட்டம் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை ஆய்வு செய்தது

Posted On: 17 OCT 2025 12:34PM by PIB Chennai

சாலைகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் என உள்கட்டமைப்பு திட்டங்களை ஆய்வு செய்ய வலையமைப்பு திட்டமிடல் குழுவின் 100-வது கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்திற்கு ஏற்ப பலவகை போக்குவரத்து  மற்றும் சரக்குப் போக்குவரத்து இணைப்பை விரிவுபடுத்துவதில் இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது.

மத்திய சாலைகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறையின் இரண்டு திட்டங்கள், இரண்டு ரயில்வே திட்டங்கள், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையின் ஒரு மெட்ரோ ரயில் திட்டம் என மொத்தம் 5 திட்டங்கள் வலையமைப்பு திட்டமிடல் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன. இந்த திட்டங்கள் பலவகை போக்குவரத்து உள்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக தேவைகளுக்கான தொலைதூரப் போக்குவரத்து தொடர்பு, அரசு முழுமைக்குமான அணுகுமுறை ஆகிய பிரதமரின் விரைவு சக்தி கோட்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனவா என்பதும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சரக்குப் போக்குவரத்து திறனை அதிகரிப்பது, பயண நேரத்தை குறைப்பது பயன்பாட்டுப் பகுதிகளுக்கு கணிசமான அளவு சமூக-பொருளாதார பயன்களை வழங்குவது ஆகியவற்றுக்கு இந்த முன் முயற்சிகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180235   

***

SS/SMB/AG/SH


(Release ID: 2180531) Visitor Counter : 6