தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

பீகார் தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா, மதுபான நடமாட்டங்களைத் தடுப்பது குறித்து அமலாக்க முகமை மற்றும் பாதுகாப்புப் படைத்தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

Posted On: 17 OCT 2025 2:56PM by PIB Chennai

பீகார் தேர்தலையொட்டி பல்வேறு தேரத்ல் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த குழுக்களுடன் தேர்தல் ஆணையம் இன்று புதுதில்லியில் உள்ள ஆணைய வளாகத்தில் ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவற்றின் சட்ட அமலாக்க முகமைகளின் பங்களிப்புக் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

தேர்தலில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட இதர சட்டவிரோத செயல்களைத் தடுப்பது குறித்த விரிவான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியம், மத்திய மறைமுக மற்றும் சுங்கவரி வாரியம் அமலாக்கத்துறை வருவாய் புலனாய்வுத் துறை, மத்திய கலால் புலனாய்வுப் பிரிவு, நிதிசார் புலனாய்வுப் பிரிவு, இந்திய ரிசர்வ் வங்கி போதைப் பொருள் தடுப்பு வாரியம், ரிசர்வ் காவல் படை, எல்லைக்காவல் படை, காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் மாநில காவல் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.

தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு முகமைகளின் தயார் நிலை குறித்து தேர்தல் ஆணையத்திடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. 

சட்ட அமலாக்க முகமைகளிடையே ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்வதன் மூலம் பொருளாதார குற்றங்களைத் திறம்பட தடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு அமலாக்க முகமையும் தேசிய மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கடத்தப்படும் சரக்குகள், போதைப் பொருள்கள், மதுபானங்கள் மற்றும் போலி ரூபாய் நோட்டுக்கள் உள்ளிட்ட ரொக்கம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே அல்லது சர்வதேச அளவில் நடைபெறும் கடத்தல்களைத் தடுப்பதற்கான நடைமுறைகளை அமலாக்க முகமைகள், வரையறை செய்து தொடர்ந்து சோதனை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பீகாரில் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்காக பூஜ்ய சகிப்புத்தன்மை என்ற கொள்கையை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

***

(Release ID: 2180291)

AD/SV/KPG/SH


(Release ID: 2180520) Visitor Counter : 11