தேசிய மனித உரிமைகள் ஆணையம்
குஜராத் மாநிலத்தில் சிறுவன் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
Posted On:
15 OCT 2025 11:20AM by PIB Chennai
தேசிய மனித உரிமைகள் ஆணையம், குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தின் காந்திகிராம் காவல் நிலையத்தில் 2025 செப்டம்பர் 1 அன்று 17 வயது சிறுவன் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டதாக வெளியான ஊடகச் செய்தி குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது. 2025 அக்டோபர் 6 அன்று இந்த சித்திரவதை வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான பிறகு, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஊடக செய்தியின் உள்ளடக்கம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது சிறுவனின் மனித உரிமை மீறல் குறித்த ஒரு தீவிரமான பிரச்சினையை எழுப்புவதாக ஆணையம் கருதுகிறது. எனவே, குஜராத் காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
2025 அக்டோபர் 7 அன்று வெளியான ஊடகச் செய்தியின்படி, இந்தச் சம்பவத்தின் வீடியோவில், ஒரு அதிகாரி சிறுவனின் தலையில் இருந்து முடியைப் பிடுங்குவதையும், மற்ற காவல்துறை அதிகாரிகள் சிரிப்பதையும் காண முடிந்தது. 2025 செப்டம்பர் 1 இரவு, கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக அந்த சிறுவன் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் சிறார் நீதிமன்றத்தில் அந்த சிறுவனும் அவரது கூட்டாளிகளும் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் சிறுவனை சிறார் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டது. சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தடுப்புக் காவலில் இருந்து சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
***
(Release ID: 2179226)
SS/EA/KR
(Release ID: 2180305)
Visitor Counter : 4