பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு ஆலோசனைக் குழு, புனேவில் உள்ள டிஆர்டிஓவின் ஏஆர்டிஇ ஆயுத ஆய்வகத்தைப் பார்வையிட்டது.

प्रविष्टि तिथि: 16 OCT 2025 5:28PM by PIB Chennai

மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு, இன்று (அக்டோபர் 16, 2025), புனேவில் உள்ள ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை (ARDE) பார்வையிட்டது. இது ஆயுதம் மற்றும் போர் பொறியியல் அமைப்புகள் (ACE) தொகுப்பின் கீழ் இயங்கும் டிஆர்டிஓவின் முதன்மையான ஆய்வகமாகும். இந்தப் பயணத்தின் போது, அந்தக் குழு தொகுப்பின் பல்வேறு ஆய்வகங்களால் உருவாக்கப்பட்ட அதிநவீன தயாரிப்புகளை ஆய்வு செய்தது.  ரோபாட்டிக்ஸ், ரயில் துப்பாக்கி, மின்காந்த விமான ஏவுதள அமைப்பு, உயர் ஆற்றல் உந்துவிசை பொருட்கள் போன்ற துறைகளில் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்களின் நிலை குறித்தும் குழுவிற்கு விளக்கப்பட்டது.

'வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும், டிஆர்டிஓவும்' என்ற தலைப்பில் உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங் , பாதுகாப்புத் துறையில் நிகழும் மாற்றம் மற்றும் போரின் வளர்ந்து வரும் தன்மையைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வேகமாக மாறிவரும் உலகில் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இந்தத் தேவையைப் பாதுகாப்பு உபகரணங்களில் ஒருங்கிணைப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை அடிகோடிட்டுக் காட்டினார்.

"இது, தொழில்நுட்ப ஆதிக்கத்தின் சகாப்தம். அறிவியலையும் புதுமையையும் முதன்மைப்படுத்தும் நாடு எதிர்காலத்தை வழிநடத்தும். தொழில்நுட்பம் தற்போது ஆய்வகங்களுடன் மட்டுப்படுத்தப்படவில்லை; அது நமது உத்திசார் முடிவுகள், பாதுகாப்பு அமைப்புமுறைகள் மற்றும் எதிர்காலக் கொள்கைகளின் அடித்தளமாக மாறியுள்ளது. பாதுகாப்பில் தன்னிறைவை அடைவது மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதும், இந்தியாவை உலகளாவிய பாதுகாப்பு கண்டுபிடிப்பு மையமாக நிறுவுவதும் எங்கள் நோக்கம்" என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார். "நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களாக மட்டும் இருக்கக்கூடாது; படைப்பாளர்களாகவும் இருக்க வேண்டும். இதை அடைய, நமது தன்னிறைவுக்கான முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது. பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு என்பது வெறும் நோக்கம் மட்டுமல்ல, அது தேசிய பாதுகாப்பிற்கான வலிமையான கேடயமும் கூட", என்று அவர் குறிப்பிட்டார்.

"டிஆர்டிஓ, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் தொழில்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறை ஆகியவை இணைந்து பாதுகாப்பு கண்டுபிடிப்புகளில் புதிய அளவுகோல்களை அமைத்து வருகின்றன. நமது இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, ரோபாட்டிக்ஸ், குவாண்டம் தொடர்பு மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தொடர்ந்து முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். நமது மக்களின் கடின உழைப்பு மற்றும் திறமை காரணமாக, இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் நம் படைகளை நவீனப்படுத்துவதுடன், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் வழங்குகின்றன," என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179962

(Release ID: 2179962)

***

AD/BR/SH


(रिलीज़ आईडी: 2180179) आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi