குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பிரேசில் துணை அதிபர் திரு ஜெரால்டோ அல்க்மின், குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு
प्रविष्टि तिथि:
16 OCT 2025 5:31PM by PIB Chennai
இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு வரும் பிரேசில் துணை அதிபரும் அந்நாட்டு தொழில்துறை மேம்பாடு, வர்த்தகம், மற்றும் சேவைகள் துறை அமைச்சருமான திரு ஜெரால்டோ அல்க்மின், குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்களை இன்று (16-10-2025) குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் சந்தித்தார்.
அப்போது இந்தியா – பிரேசில் இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருதலைவர்களும் நம்பிக்கைத் தெரிவித்தனர். எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துதல், மருந்து உற்பத்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் கூட்டாண்மையை வலுப்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் முதலீட்டை ஊக்குவித்தல் தொடர்பாக விவாதித்தனர்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் ஒருங்கிணைப்பைக் கண்டறிதல், கூட்டாண்மையை மேம்படுத்துதல் தொடர்பாகவும் இருவரும் விவாதித்தனர்
***
(Release ID: 2179963 )
AD/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2180124)
आगंतुक पटल : 28