எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உயர் வெப்பநிலையில் குழாய் வடிவ எஃகு உற்பத்திக்கான தரநிலை உரிமம் பெற்றுள்ள முதலாவது இந்திய நிறுவனமாக என்எம்டிசி ஸ்டீல் உருவெடுத்துள்ளது

प्रविष्टि तिथि: 16 OCT 2025 1:44PM by PIB Chennai

நவீன தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த எஃகு உற்பத்தி நிறுவனமான என்எம்டிசி ஸ்டீல்  நிறுவனம் உயர் வெப்பநிலையில் குழாய்களுக்கான உருளை வடிவ எஃகு, தகடுகள் மற்றும் எஃகு தட்டைகள்   உற்பத்திக்கான இந்திய  தரநிலை சான்றிதழ் பெற்றுள்ள முதலாவது நிறுவனம் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.

ராய்பூரில்  உலக தரநிலை தினத்தன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான சான்றிதழை இந்திய தர அமைவனம் வழங்கியது.

இந்த சான்றிதழை சட்டீஸ்கர் மாநில முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், என்எம்டிசி ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் திரு அம்ரித் நாராயணனிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள் விநியோகத்துறை அமைச்சர் திரு தயாள் தாஸ் பேஹல், பிஐஎஸ் அமைவனத்தின் இயக்குநரும், தலைவருமான திரு எஸ் கே குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.

எஃகு உற்பத்தியில் தரம், புதுமை கண்டுபிடிப்புகள், நீடித்த மேம்பாடு ஆகியவற்றை உறுதிசெய்வதற்கு இந்த  தர சான்றிதழ் உத்வேகம் அளித்திடும்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் செயல்திறனுடன் கூடிய உலகத் தரத்திலான எஃகு தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கும் இது உத்வேகம் அளித்திடும்.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179816  

***

SS/SV/AG/SH


(रिलीज़ आईडी: 2180080) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Telugu