தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைத்தொடர்பு கட்டணம் மற்றும் கணக்கு விவர அறிக்கையை தனித்தனியாக தாக்கல் செய்யும் வகையில் வரைவு திருத்த அறிக்கையை ட்ராய் வெளியிட்டுள்ளது

Posted On: 16 OCT 2025 1:18PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) இரண்டு திருத்தங்களுக்கான வரைவு அறிக்கை இன்று (16.10.2025) வெளியிட்டுள்ளது.

இதன்படி,

  1. தொலைத்தொடர்பு கட்டணங்கள் (72-வது திருத்தம்) ஆணை 2025 குறித்த வரைவு திருத்த அறிக்கை.
  2. தனி கணக்கு விவர அறிக்கை (திருத்தம்) ஒழுங்குமுறை விதிகள் 2025-க்கான வரைவு அறிக்கை.

இந்த வரைவு திருத்த அறிக்கைகளுடன் ஏற்கனவே உள்ள தொலைத்தொடர்பு கட்டண ஆணை 1999 மற்றும் தனி கணக்கு ஒழுங்குமுறை 2016 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

நிதிசார் விதிமுறைகளில் உள்ள சில பிரிவுகள் திருத்தங்களை மேற்கொள்வதற்கான இந்த முன்மொழிவு ஒழுங்குமுறை செயல்பாடுகளுக்கான பிரிவுகளில் உள்ள இணக்க நடைமுறைகளை மேம்படுத்துவதை உறுதி செய்கிறது.

இந்த திருத்தம் நிதிசார் ஊக்கத்தொகை வழங்கும் பரிந்துரைகளுக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நிதிசார் ஊக்கத்தொகைகளை காலதாமதமாக வழங்குவது அல்லது ஊக்கத்தொகை வழங்காததற்கு வட்டி விதிக்க இந்த திருத்தம் வழி செய்கிறது.

இந்த வரைவு திருத்த அறிக்கை ட்ராய் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த மாதம் 31-ந் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான விமர்சனங்களை மின்னணு முறையில் ட்ராய் இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம் என்று (நிதி மற்றும் பொருளாதார பகுப்பாய்வாளர்) அதன் ஆலோசகர் திரு விஜயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பான தகவல்களுக்கு ஆலோசகரை 011-20907773 என்ற தொலைபேசி எண் மூலமாக தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும். https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179802

***

SS/SV/AS/SH


(Release ID: 2180073) Visitor Counter : 4