இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
Posted On:
16 OCT 2025 11:52AM by PIB Chennai
மைபாரத் இணையதளம் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் விநாடி வினா 2026-ல் பங்கேற்பதற்கான கடைசி தேதியை 2025 அக்டோபர் 31 வரை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நீட்டித்துள்ளது. இந்த விநாடி வினாவில் ஏற்கனவே 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்திய இளைஞர்களின் இந்த பெரும் வரவேற்பு காரணமாக கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் 2026-ன் முதலாவது நிலை இந்த விநாடி வினா நிகழ்ச்சியாகும். மைபாரத் இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் விநாடி வினா போட்டியில் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான இளைஞர்களின் சிந்தனைகள் மற்றும் இந்தியா குறித்த அவர்களது கருத்துக்கள் அறிந்து கொள்ளப்படுகிறது.
இதில் பங்கேற்கும் அனைவருக்கும் மின்னணு சான்றிதழ்கள் வழங்கப்படும். முதல் பத்தாயிரம் வெற்றியாளர்கள் அடுத்த நிலையை அடைவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் தங்களது கருத்துக்களை பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
விநாடி வினா போட்டியில் பங்கேற்க விரும்புவோர் https://mybharat.gov.in/quiz. என்ற இந்த இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179761
***
SS/IR/KPG/KR
(Release ID: 2179930)
Visitor Counter : 10