பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய ராணுவத்துக்காக ₹659.47 கோடி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது

Posted On: 15 OCT 2025 5:54PM by PIB Chennai

இந்திய ராணுவத்திற்கான துணைக்கருவிகளுடன், 7.62 x 51மிமீ அசால்ட் ரைஃபிள்களை இரவு நேரத்தில் இயக்கக் கூடிய இமேஜ் இன்டென்சிஃபயர் உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சகம்,  எம்கேயு லிமிடெட் (லீட் உறுப்பினர்) மற்றும்  மெட்பிட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டமைப்புடன் ₹659.47 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இன்று (அக்டோபர் 15, 2025) கையெழுத்திட்டது. இமேஜ் இன்டென்சிஃபயர், வீரர்கள் எஸ்ஐஜி 716 அசால்ட் ரைஃபிளின் நீண்ட தூர வரம்பை முழுமையாகப் பயன்படுத்த உதவும்.

இந்த உபகரணங்கள் நட்சத்திர ஒளி நிலைமைகளின் கீழ் கூட, 500 மீட்டர் தூரம் வரை இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை மற்றும் தற்போதுள்ள கருவிகளை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்குகின்றன. 51% க்கும் அதிகமான உள்நாட்டு கருவிகளுடன் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட பிரிவின் கீழ் கொள்முதல் செய்ய வகைப்படுத்தப்பட்ட இந்த தயாரிப்பு, பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கிய ஒரு முக்கிய முயற்சியாகும். இந்த முயற்சி உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதிலும் மூலப்பொருட்களை வழங்குவதிலும் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179522

(Release ID: 2179522)

***

AD/BR/SH


(Release ID: 2179683) Visitor Counter : 8