வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு பிராந்தியத்தை இந்தியாவின் விளையாட்டு மையமாக மாற்ற உயர்மட்ட பணிக்குழு கூட்டம்
Posted On:
15 OCT 2025 5:31PM by PIB Chennai
வடகிழக்கு பிராந்தியத்தில் விளையாட்டு மேம்பாட்டுக்கான இரண்டாவது உயர்மட்ட பணிக்குழு கூட்டம் இன்று மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா தலைமையில் நடைபெற்றது. வடகிழக்கு மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா, இணையமைச்சர் ரக்ஷா காட்சே மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
2025 ஏப்ரல் கூட்டத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் திறமை மேம்பாட்டுக்கான விரிவான திட்டம் வகுக்கப்பட்டது.
அமைச்சர் திரு. சிந்தியா, வடகிழக்கின் வளமான விளையாட்டு பாரம்பரியத்தை எடுத்துரைத்து, அடித்தளத்திலிருந்து மேல்நோக்கிய அணுகுமுறை, நீண்டகால பயிற்சி ஈடுபாடு மற்றும் திறமை தேடல் முறைகளின் அவசியத்தை வலியுறுத்தினார். நவீன வசதிகள் மேம்பாடு, உள்ளூர் திறமைகளை வளர்த்தெடுப்பது மற்றும் அடித்தட்டு அளவில் பங்கேற்பு ஊக்குவிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பொது-தனியார் கூட்டு செயல்பாடு வழியாக முதலீடுகளை ஈர்ப்பது, திறமை வளமான பகுதிகளை அடையாளம் காண்பது மற்றும் கட்டம்-கட்டமாக செயல்படுத்தக்கூடிய திட்டம் உருவாக்குவது குறித்து பணிக்குழு ஆலோசித்தது.
சரியான உள்கட்டமைப்பு மற்றும் கொள்கை ஆதரவுடன், வடகிழக்கு பிராந்தியம் சர்வதேச அளவிற்கு தரமான விளையாட்டு வீரர்களை உருவாக்கி, இந்தியாவுக்கு உலகளாவிய அங்கீகாரம் பெற்றுத் தரும் என்று அமைச்சர் திரு. சிந்தியா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179490
வெளியீட்டு அடையாள எண் 2179490
***
AD/VK/SH
(Release ID: 2179647)
Visitor Counter : 3