சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மூன்று பல்கலைக்கழகங்களில் டாக்டர் அம்பேத்கர் இருக்கைகள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
Posted On:
15 OCT 2025 3:02PM by PIB Chennai
புதுதில்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் மும்பை பல்கலைக்கழகம், ஜெய்ப்பூர் தேசிய பல்கலைக்கழகம், தொழில்நுட்ப மற்றும் வேளாண் பல்கலைக்கழகத்தின் ஜிபி பந்த் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் புதிய டாக்டர் அம்பேத்கர் இருக்கைகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சிக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை 2025 அக்டோபர் 15 அன்று ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமை வகித்தார். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் திரு அமித் யாதவ், அமைச்சகத்தின் உயரதிகாரிகள், டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை பிரதிநிதிகள், துணைவேந்தர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
அப்போது உரையாற்றிய அமைச்சர், கல்வி மற்றும் ஆராய்ச்சி முன் முயற்சிகள் மூலம் பாரத ரத்னா டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் சிந்தனைகளை பரப்புவதில் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையின் தொடர் முயற்சிகளை பாராட்டுவதாக தெரிவித்தார். டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்கின்படி சமமான மற்றும் உள்ளடக்கிய சமூகத்தை கட்டமைப்பதற்கு கல்வி, சமூக விழிப்புணர்வு, கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு ஆகியவை மிகவும் வலிமைமிக்கது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179363
***
SS/IR/AG/SH
(Release ID: 2179600)
Visitor Counter : 9