தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 32-வது நிறுவன நாள் நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக பங்கேற்பார்

Posted On: 14 OCT 2025 12:52PM by PIB Chennai

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 32-வது நிறுவன நாள் நிகழ்ச்சி 2025 செப்டம்பர் 16 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக பங்கேற்று தொடக்கவுரை ஆற்றுவார். இந்த நிகழ்ச்சியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி திரு வி ராமசுப்பிரமணியன், உறுப்பினர்கள் நீதிபதி பித்யுத் ரஞ்சன் சாரங்கி, திருமதி விஜய பாரதி சயானி, திரு பிரியங்க் கனூங்கோ, தலைமைச் செயலாளர் திரு பரத் லால் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சியையொட்டி சிறைக்கைதிகளின் மனித உரிமைகள் குறித்த ஒருநாள் தேசிய கருத்தரங்கமும் நடைபெறும். இந்த கருத்தரங்க அமர்வுகளில் பொருத்தமான மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், சட்ட வல்லுநர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், மனித உரிமை பாதுகாப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.

நிறுவன தின நிகழ்ச்சி மற்றும் தேசிய கருத்தரங்கு நிகழ்சிகளை யூடியூப் மற்றும் வெப்காஸ்ட்டில் நேரலையில் காணலாம்.

கடந்த 32 ஆண்டுகளில் இந்த ஆணையம் 23 லட்சத்து 79 ஆயிரத்து 43 வழக்குகளை கையாண்டுள்ளது. இவற்றில் 2981 வழக்குகள் தாமாக முன்வந்து எடுக்கப்பட்டவையாகும். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8924 வழக்குகளில் ரூ.263 கோடி நிவாரணத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2024 அக்டோபர் 1 முதல் 2025 செப்டம்பர் 30 வரை தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட 108 வழக்குகள் உட்பட 73,849 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் 63 கள ஆய்வுகளை ஆணையம் நடத்தியுள்ளது. 210 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9 கோடி நிவாரணத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178799

 

***

AD/SMB/AG/SH


(Release ID: 2179100) Visitor Counter : 4