பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய அமைதிக்கு மேம்படுத்தப்பட்ட ஆலோசனை, ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, திறன் மேம்பாடு அவசியம் – பாதுகாப்பு அமைச்சர்

Posted On: 14 OCT 2025 1:41PM by PIB Chennai

ஐக்கிய நாடுகள் அவையின் அமைதிக் காக்கும் பணியில் பங்களிக்கும் நாடுகளுக்கு வழிகாட்டுக் கொள்கையை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் விளக்கியுள்ளார். அதன்படி, வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வதற்கும் உலகளாவிய அமைதியை உறுதி செய்வதற்கும் மேம்படுத்தப்பட்ட ஆலோசனை, ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, திறன் மேம்பாடு ஆகிய நான்கு அம்சங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். புதுதில்லி மானக்ஷா மையத்தில் 2025 அக்டோபர் 14 முதல் 16-ம் தேதி வரை நடைபெறும் ஐநா-விற்கு படைகளை அளிக்கும் நாடுகளின் தளபதிகள் மாநாட்டை தொடங்கிவைத்த போது இதனைத் தெரிவித்தார்.

சமச்சீரற்ற போர் முறை, பயங்காரவாதம், பலவீனமான அரசியல்
சூழல் போன்ற நிலையற்ற தருணங்கள் முதல் மனித சமூக நெருக்கடிகள், தொற்று நோய்கள் அல்லது இயற்கை பேரிடர்களிடையே செயல்படுவது மற்றும் தவறான தகவல் பிரச்சாரங்களை எதிர்கொள்வது வரை அமைதிக் காக்கும் படையினர் தற்போது எதிர்கொண்டு வரும் சவால்களில் வளர்ந்து வரும் சிக்கல்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைத்தார்.   அமைதி காக்கும் நடவடிக்கைகளின் நீடித்தத் தன்மைக்காக உறுப்பு நாடுகள், குறிப்பாக தொழில்நுட்ப நிதித்திறன்களைக் கொண்ட நாடுகள், துருப்புகள், காவல்துறை, சரக்குப் போக்குவரத்து, தொழில்நுட்பம் மற்றும் சிறப்புத் திறன்கள் மூலம் தங்களுடைய ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் தூதரகங்களில் பணியாற்றும் இந்திய பெண் அதிகாரிகள், அதிகாரமளித்தலின் உலகாளவிய சின்னம் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178839

***

SS/IR/KPG/SH


(Release ID: 2179091) Visitor Counter : 12