வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் பெரும் பயனளிக்கிறது- மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

प्रविष्टि तिथि: 13 OCT 2025 4:54PM by PIB Chennai

புதுதில்லியில் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம்  தொடங்கப்பட்டதன் நான்காம் ஆண்டு நிகழ்ச்சியில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்த முன்முயற்சியின் மாற்றத்தக்க தாக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் சாதாரண திட்டமாக இல்லாமல், விரைவான வளர்ச்சியையும், வலிமையையும் அளிப்பதாக கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மூலமும், நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக உள்கட்டமைப்புத் திட்டங்களை எவ்வாறு சிறப்பாகத் திட்டமிட்டு செயல்படுத்த முடியும் என்பது குறித்த சுமார் இருபது ஆண்டு கால தீவிர சிந்தனையிலிருந்தும் வெளிப்படும் மிக வலுவான திட்டமாக இது அமைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். அரசுக்கு தலைமை வகித்த காலத்தில், பிரதமர் புதுமையான சிந்தனையை நிர்வாகத்தில் கொண்டு வருவதில் பெயர் பெற்றவர் என்றும், மேலும் நாட்டை ஒரு வளமான மற்றும் வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தெளிவான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளார் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு அனைத்து பங்குதாரர்களும் கூட்டாக உறுதிபூண்டுள்ளனர் என்றும், அந்தப் பயணத்தில் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் மிக முக்கிய பங்கு வகிப்பதாக திரு கோயல்  குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178500  

***

AD/IR/AG/SH


(रिलीज़ आईडी: 2178696) आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu