தேர்தல் ஆணையம்
பீகார் சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசோதனை செய்யப்பட்டு அது குறித்த பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
Posted On:
13 OCT 2025 3:26PM by PIB Chennai
பீகார் சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலையொட்டி, அதில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபேட் கருவிகளின் செயல்பாடுகள் குறித்த முதல் கட்ட மாதிரி அடிப்படையிலான சோதனைகள் இம்மாதம் 11-ம் தேதி நிறைவடைந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் பிரதிநிதிகளின் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களின் சோதனைகள் நடைபெற்றுள்ளது.
முதல்கட்ட பரிசோதனைக்குப் பிறகு மொத்தம் 54,311 வாக்குப்பதிவு எந்திரங்கள், அதே எண்ணிக்கையிலான கட்டுப்பாடுக் கருவிகள் மற்றும் 58,123 விவிபேட் கருவிகளும் 121 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 45,336 வாக்குச் சாவடிகளுக்கு விகிதாச்சாரமற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொகுதி வாரியான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் குறித்த பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அந்தந்த மாவட்ட தலைமைக்கும் பகிரப்பட்டுள்ளது.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிளில் பாதுகாப்பான அறைகளில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டபிறகு பட்டியலில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள், அனைத்துத் தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
***
(Release ID: 2178441 )
SS/SV/KPG/KR
(Release ID: 2178683)
Visitor Counter : 6