PIB Headquarters
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு மூலம் இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்துதல்

Posted On: 12 OCT 2025 4:42PM by PIB Chennai

செயற்கை நுண்ணறிவின் புதிய சகாப்தத்தின் உச்சத்தில் இந்தியா உள்ளது. தொழில்நுட்பம் வாழ்க்கையை மாற்றி நாட்டின் முன்னேற்றத்தை மேம்படுத்துகிறது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இனி ஆராய்ச்சி ஆய்வகங்கள் அல்லது பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இது ஒவ்வொரு நிலையிலும் மக்களைச் சென்றடைகிறது. தொலைதூரப் பகுதிகளில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவது முதல் விவசாயிகள் தகவலறிந்து, பயிர் சாகுபடி குறித்த முடிவுகளை எடுக்க உதவுவது வரை, செயற்கை நுண்ணறிவு அன்றாட வாழ்க்கையை எளிமையாக்குகிறது. சிறந்த கற்றல் மூலம் வகுப்பறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. நகரங்களை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகிறது. பொது சேவைகளை மேம்படுத்துகிறது.

இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கம் போன்ற முயற்சிகள் இந்த மாற்றத்தின் மையமாக உள்ளன. அவை கணினி சக்திக்கான அணுகலை விரிவுபடுத்தி ஆராய்ச்சியை அதிகரிக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படக் கூடிய பணிகளை, இயந்திரங்களின் திறன் மூலம் செய்வது ஆகும். இந்தியாவின் தொழில்நுட்பத் துறை வேகமாக விரிவடைந்து வருகிறது. இத்துறையில் நடப்பு ஆண்டு வருவாய் 280 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த சூழல் அமைப்பில் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர்.

இந்தியாவில் சுமார் 1.8 லட்சம் புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. தொழில்துறை, வாகனம், நுகர்வோர் பொருட்கள், சில்லறை விற்பனை, வங்கி, நிதி சேவைகள், காப்பீடு, சுகாதாரப் பராமரிப்பு ஆகியவை செயற்கை நுண்ணறிவை ஏற்றுப் பயன்படுத்துவதில் முன்னணி துறைகளாக உள்ளன.

 

செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், விவசாயம் முதல் கல்வி, நிர்வாகம், பருவநிலை முன்னறிவிப்பு வரை அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் தொடும் ஒரு புதிய அலையைக் கொண்டு வருகிறது. இது மருத்துவர்களுக்கு நோய்களை விரைவாகக் கண்டறிய உதவுகிறது. விவசாயிகள் தரவு சார்ந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. மாணவர்களுக்கான கற்றல் விளைவுகளை மேம்படுத்துகிறது. நிர்வாகத்தை மிகவும் திறமையாகவும் வெளிப்படையாகவும் ஆக்குகிறது.

2047-ம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை அடைந்து வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வைக்காக செயற்கை நுண்ணறவை இந்தியா பயன்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178092

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132817

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108810

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113095

https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=149242

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132377

https://indiaai.gov.in/article/building-india-s-foundational-ai-models-indiaai-innovation-initiative

https://indiaai.gov.in/globalindiaaisummit/about-global-indiaai-summit

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108961

https://aikosh.indiaai.gov.in/home/

https://bhashini.gov.in/about-bhashini

https://bhashini.gov.in/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135178

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112485

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163813

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175355

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175639

https://bharatgen.com/

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2002010

https://niti.gov.in/AI-for-Viksit-Bharat-the-opportunity-for-accelerated-economic-growth.pdf

https://niti.gov.in/sites/default/files/2025- 10/Roadmap_On_AI_for_Inclusive_Societal_Development.pdf

****

 

(Release ID: 2178092)

AD/PLM/SG

 

 

 


(Release ID: 2178177) Visitor Counter : 4