சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச ஊதா விழாவில் மூன்று முக்கிய முயற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன

प्रविष्टि तिथि: 12 OCT 2025 2:14PM by PIB Chennai

மாற்றுத் திறனாளிகளின் திறன்களை வெளப்படுத்தும் சர்வதேச ஊதா விழா (பர்பிள் ஃபெஸ்டிவல்) கோவாவில் நடைபெறுகிறது. விழாவின் இரண்டாவது நாளான நேற்று (11.10.2025) மாற்றுத்திறனாளிகள் கேட்பது, படிப்பது, எழுதுவது ஆகியவற்றை மேலும் எளிமைப்படுத்த மூன்று முக்கிய முயற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டு அது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் இந்த முயற்சிகளைத் தொடங்கி வைத்து அறிவிப்புகளை வெளியிட்டார். தடையற்ற கற்றல் சூழலை உருவாக்குவதற்கும், மாற்றுத்திறனாளிகள் உலகளாவிய கல்வி வாய்ப்புகளில் முழுமையாக பங்கேற்பதற்கும் அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்த முயற்சிகள் பிரதிபலிக்கின்றன.

முதலாவதாக வெளியிடப்பட்டது மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பயிற்சி கையேடு ஆகும்.

இரண்டாவதாக இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான 2025 டிசம்பர் 3 அன்று புது தில்லியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மதிப்பீட்டுப் பயிற்சிகளில் பங்கேற்றவர்களுக்கு இந்த சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மூன்றாவதாக, சைகை மொழி ஆராய்ச்சி மையம் சார்பில் டிசம்பர் 3 அன்று தொடங்கி, காது கேளாதோருக்கான ஒரு மாத பயிற்சித் திட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் தேசிய, சர்வதேச தளங்களில் சிறந்து விளங்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையை இந்த மூன்று முயற்சிகளும் பிரதிபலிக்கின்றன.

****

(Release ID: 2178048)

AD/PLM/SG

 


(रिलीज़ आईडी: 2178108) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Malayalam