சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
டெலி மானஸ் செயலியின் புதிய முன்முயற்சிகளை அமைச்சர் திரு ஜே பி நட்டா வெளியிட்டார்
प्रविष्टि तिथि:
10 OCT 2025 4:54PM by PIB Chennai
2025 உலக மனநல தின நிகழ்வையொட்டி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜே பி நட்டா இன்று புதுதில்லியில் தேசிய தொலைதூர மனநல திட்டத்திற்காக (டெலி மானஸ்) பல புதிய முன்முயற்சிகளை தொடங்கி வைத்தார்.
புதிய வசதிகளில், பன்மொழி வசதி, உரையாடல் இயங்கி (சாட்பாட்) உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அவசரகாலத்தில் தொடர்பு கொள்ளும் வசதியும் அதில் அடங்கும். ஆங்கிலம், இந்தி தவிர தற்போது அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு, ஒடியா, பஞ்சாபி ஆகிய 10 பிராந்திய மொழிகளில் செயலி கிடைக்கும். மேலும், பார்வையற்றோர் தொடர்பு கொள்வதற்கான வசதிகளும், 'அஸ்மி' என்ற உரையாடல் இயங்கியும், அவசரகால வழிகாட்டுதல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு நட்டா, "ஆரோக்கியமான மனம் ஆரோக்கியமான உடலுக்கும், ஆரோக்கியமான நாட்டுக்கும் வழிவகுக்கிறது. மனநல சேவைகளுக்கான சமமான, குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளையும், உள்ளடக்கிய சேவையை உறுதிசெய்ய இந்தியா உறுதிபூண்டுள்ளது" என்றார்.
திருமதி தீபிகா படுகோன் அவர்கள் மனநல தூதராக நியமிக்கப்பட்டுள்ளதையும் அவர் அறிவித்தார். "மனநலம் குறித்த விழிப்புணர்வை பரவலாக்கவும், தவறான புரிதலை குறைக்கவும், பொது சுகாதாரத்தின் அங்கமாக மனநலத்தை முன்னிலைப்படுத்தவும் இவரது பங்களிப்பு உதவும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177389
வெளியீட்டு அடையாள எண் 2177389
***
SS/VK/SH
(रिलीज़ आईडी: 2177639)
आगंतुक पटल : 35