PIB Headquarters
விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் விலைப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது
Posted On:
10 OCT 2025 12:25PM by PIB Chennai
அனைத்து பருவகால சூழலிலும் அயராது பாடுபட்டு வரும் விவசாயிகள் நிச்சயமற்ற வானிலை மற்றும் சந்தை சூழல்கள் காரணமாக இழப்பை சந்தித்து வருகின்றன. பருவம் தவறி பெய்யும் மழை, வறட்சி, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்கள் பல நாட்களாக வேளாண்மை பணியில் கடும் பணியாற்றியுள்ள விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. பயிர்களை அறுவடை செய்தபோதும் நிச்சயமற்ற சந்தை விலைகள் காரணமாக வேளாண் விலைப்பொருட்களுக்கு உரிய விலைக் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக உற்பத்திச் செலவைக் காட்டிலும் குறைந்த விலையில் வேளாண் விலைப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இது போன்ற இடர்பாடுகளை களையும் வகையில் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயித்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிறது.
ஆண்டுதோறும் 22 முக்கிய வேளாண் பயிர்களுக்கு வேளாண் உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது.
இதன்படி, 2025-26-ம் ஆண்டிற்கான காரீஃப் பருவத்தில் பயிரிடப்படும் நைஜர் வித்துக்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு 820 ரூபாயாகவும், ராகிக்கு குவிண்டால் ஒன்றுக்கு 596 ரூபாயாகவும், எள் பயிருக்கு குவிண்டால் ஒன்றுக்கு 579 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கம்பு, சோளம், துவரை, உளுந்து போன்ற பயிர் வகைகளுக்கு அதன் உற்பத்தி செலவைக் காட்டிலும் கூடுதலாக முறையே 63%, 59%, 59%, 53% வரை லாபம் கிடைக்கிறது. இவை தவிர, பிற பயிர் வகைகளுக்கு அதன் உற்பத்திச் செலவைக் காட்டிலும் கூடுதலாக 50% லாபம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2026-27-ம் ஆண்டில் பயிரிடப்படும் ராபி பருவ பயிர் வகைகளை 297 லட்சம் மெட்ரிக் டன் அளவில் 84,263 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177219
***
SS/SV/SG/SH
(Release ID: 2177509)
Visitor Counter : 8