PIB Headquarters
azadi ka amrit mahotsav

ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் மணிப்பூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது

प्रविष्टि तिथि: 10 OCT 2025 10:38AM by PIB Chennai

சிறு வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட அனைவரும் எளிதில் வர்த்தகம் புரிவதை உதவி செய்யும் நோக்கில் மத்திய அரசு ஜிஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் மணிப்பூர் மாநில பொருளாதார வளர்ச்சிக்கும் சிறு அளவிலான தொழில்துறையினருக்கும், பாராம்பரிய கைவினை கலைஞர்களுக்கும், வேளாண் சார்ந்த வாழ்வாதார மேம்பாட்டிற்கும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உற்பத்திக்கான செலவுகளை குறைப்பதன் மூலம் தேவைகளை அதிகரிப்பதற்கும் மணிப்பூர் மாநிலத்தின் தனித்துவமிக்க தயாரிப்புகளுக்கு உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளின் போட்டித்தன்மையை உருவாக்கும் வகையிலும், சீர்திருத்த நடவடிக்கைகள் அமைந்துள்ளது.

நாட்டின் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதுடன் பாரம்பரியமிக்க வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் உள்ளூர் சமுதாய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேக்கேஜிங் செய்யப்பட்ட காஃபிக்கான ஜிஸ்டி விகிதம் 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அம்மாநில காஃபி உற்பத்தித் துறைக்கு நிவாரணமாக அமைந்துள்ளது. உக்ரூல், சேனாபதி மற்றும் சாண்டல் ஆகிய மாவட்டங்கள் காஃபி அறுவடைக்கான மையமாக உள்ளது. இப்பகுதியில் உயர் தரத்திலான அரேபிய வகை காஃபி பயிரிடப்படுகிறது. இதில் 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177158   

***

SS/SV/SG/SH

 


(रिलीज़ आईडी: 2177303) आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Nepali , हिन्दी , Manipuri , Bengali-TR , Odia