பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தனியார் துறையில் பாதுகாப்பு ஆராய்ச்சியை விரைவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

प्रविष्टि तिथि: 10 OCT 2025 10:15AM by PIB Chennai

இந்தோ – பசிபிக் பிராந்திய வளமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சிட்னியில் இன்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா பாதுகாப்பு தொழில் வர்த்தக வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, மக்கள் தொடர்பு, வர்த்தக நடவடிக்கைகள் ஆகிய மூன்றும் இரு நாடுகளுக்கு இடையே விரிவான நல்லுறவிற்கு அவசியம் என்று அவர் கூறினார். பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சி புதிய கண்டுபிடிப்புகள், கூட்டு படைப்பாற்றல், கூட்டு உற்பத்தி என இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளிடையே ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார். பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தியா சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக உற்பத்தி துறையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி கடந்த நிதியாண்டில் 1.51 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாகவும்,இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 18% கூடுதல் என்றும் அவர் கூறினார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் இயற்கையான ஒத்துழைப்பு இருப்பதாகவும், இது போன்ற வட்டமேசை மாநாடுகள் இதற்கு மேலும் வலுசேர்ப்பதாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

குவாண்டம், கம்ப்யூட்டிங், நீருக்கு அடியில் இயங்கும் வாகனங்கள், அதிநவீன கடல்சார் கண்காணிப்புக் கருவிகள் போன்றவற்றின் உற்பத்தியில் ஆஸ்திரேலியா சிறந்து விளங்குவதாகவும், மென்பொருள், கப்பல் கட்டுமானம், ஏவுகணை மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா வலுவடைந்து வருவதாகவும் அவர் தெவித்தார்.

தனியார் துறையில் பாதுகாப்பு ஆராய்ச்சிப் பணிகள் விரைவுப்படுத்தும் வகையில் தொழில்நுட்ப உதவியுடன் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177149   

***

SS/SV/SG/KR


(रिलीज़ आईडी: 2177221) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Malayalam