சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் காசநோய் 17.7% குறைந்துள்ளது: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே பி நட்டா
प्रविष्टि तिथि:
09 OCT 2025 4:52PM by PIB Chennai
விரிவான மற்றும் முழுமையான மருத்துவ முறையை கட்டமைக்கும் நோக்கில் புதிய சகாப்தத்திற்கான மருத்துவ பராமரிப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திரு ஜே பி நட்டா தெரிவித்துள்ளார். புதுதில்லியில் நடைபெற்ற கேர்@25 – சுகாதார சேவையில் முக்கிய தருணங்கள் என்ற கருப்பொருளில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்தியாவில் சுகாதாரத் துறை கடந்த 25 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருவதாக கூறினார்.
சுகாதார பராமரிப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற நிலையில் இருந்து குணப்படுத்துதல், ஊக்குவித்தல், மறுவாழ்வு மற்றும் நோய் தடுப்பு சிகிச்சை முறைகள் என பல்வேறு வகைகளில் வளர்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வகையிலும் முழுமையான சுகாதார வசதிகளை உறுதி செய்யும் வகையிலும் நாடு முழுவதும் 1.7 லட்சம் சுகாதார சேவை மையங்களை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
ஆஷா பணியாளர்கள் மற்றும் முன்கள சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய முயற்சிகள் காரணமாக மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 89%-மாக அதிகரித்துள்ளது என்று கூறினார்.
மேலும் இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.7% அளவிற்கு குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் தெரிவிப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இது சர்வதேச சராசரி அளவைக் காட்டிலும் 2 மடங்கு அதிகமாகும் என்று திரு ஜே பி நட்டா தெரிவித்தார்.
***
(Release ID: 2176851 )
SS/SV/SG/SH
(रिलीज़ आईडी: 2177056)
आगंतुक पटल : 24