சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புகையிலை பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதற்கு அரசு நடவடிக்கை – மத்திய இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல்

प्रविष्टि तिथि: 09 OCT 2025 4:54PM by PIB Chennai

புகையிலை பயன்பாடு இல்லா இளையோர் இயக்கம் 3.0-வை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இன்று தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், புகையிலை நுகர்வு என்பது பொது சுகாதார சவாலாகும் என்றும், சிகரெட், பீடி மற்றும் புகையற்ற புகையிலை பொருட்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இது பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் அடிமையாதல், நீண்டகால நோய் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு கூட வழிவகுக்கிறது என தெரிவித்தார்.

புகையிலை தொடர்பான சுகாதார அபாயங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்ட திருமதி அனுப்பிரியா படேல், திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் தளங்களில் புகையிலை சித்தரிப்பை ஒழுங்குபடுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று தெரிவித்தார். சுகாதார எச்சரிக்கைகள் மற்றும் புகையிலை பாதிப்பு குறித்த செய்திகள் பல்வேறு பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.  புகையிலையின் வரம்பை மேலும் கட்டுப்படுத்த, அனைத்து வகையான புகையிலை விளம்பரம் மற்றும் நிதி அளித்தல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மின்னணு சிகரெட்டுகள் உட்பட அனைத்து விதமான புகையிலை பொருட்களில் பெரியளவில் படத்துடன் கூடிய சுகாதார எச்சரிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், இது உலகளவில் மிகவும் வலுவான ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கு 100 கெஜம் தூரத்திற்குள் புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.  நாடு முழுவதும் மின்னணு சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை, போக்குவரத்து மற்றும் சேமிப்பு முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாக திருமதி அனுப்பிரியா படேல் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176854  

***

SS/IR/AG/SH

 


(रिलीज़ आईडी: 2177053) आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi