பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் திரு ரிச்சர்ட் மார்லெசை சந்தித்தார்
प्रविष्टि तिथि:
09 OCT 2025 12:37PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான திரு ரிச்சர்ட் மார்லெஸ்- உடன் 2025 அக்டோபர் 09 அன்று இருதரப்பு பேச்சு நடத்தினார். ஆஸ்திரேலியா- இந்தியா பாதுகாப்பு அமைச்சர்களின் உரையாடலின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா-இந்தியா பாதுகாப்பு அமைச்சர்களின் உரையாடலில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை ஆஸ்திரேலிய துணைப்பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான திரு ரிச்சர்ட் மார்லெஸ் வரவேற்றார். 2020-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆஸ்திரேலியா- இந்தியா விரிவான உத்திசார்ந்த கூட்டாண்மை மேம்படுத்தப்பட்டதில் இருந்து அமைச்சர்களுக்கு இடையேயான நான்கு முறை நடைபெற்ற இருதரப்பு சந்திப்புகளைத் தொடர்ந்து, இருதரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தையும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அமைச்சர்களின் நோக்கத்தையும் இந்த உரையாடல் பிரதிபலித்தது.
கூட்டு வலிமையை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளின் பாதுகாப்பிற்கு பங்களிப்பதற்கும், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு முக்கிய பங்களிப்பை வழங்குவதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான பிரதமர்களின் நீண்டகால தொலைநோக்கு பார்வையை அமைச்சர்கள் எடுத்துரைத்தனர். கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு வழிகாட்டுதல் குறித்து அவர்கள் விவாதித்தனர். மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டு பிரகடனத்தை பிரதமர்கள் புதுப்பித்து வலுப்படுத்துவதை எதிர்நோக்கினார்கள்.
ஆண்டுதோறும் பாதுகாப்பு அமைச்சர்கள் உரையாடலை நடத்துவதன் மூலம் இருதரப்பு பாதுகாப்பு கட்டமைப்பை விரிவுபடுத்தவும், ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அமைச்சர்கள் உறுதியளித்தனர். பரஸ்பர நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு குறித்த ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அமைச்சர்கள் வரவேற்றனர். 2024-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட வான்வழி எரிபொருள் நிரப்புதல் தொடர்பான ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர்கள் வரவேற்றனர். தகவல் பகிர்வில் நெருக்கமான ஒத்துழைப்பை அமைச்சர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176670
***
SS/IR/AG/SH
(रिलीज़ आईडी: 2177013)
आगंतुक पटल : 18