குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர், குடியரசுத் துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனை சந்தித்தார்
प्रविष्टि तिथि:
08 OCT 2025 8:18PM by PIB Chennai
தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், குடியரசுத் துணைத் தலைவரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான திரு சி பி ராதாகிருஷ்ணனை இன்று சந்தித்துப் பேசினார்.
பழமை வாய்ந்த வரலாறு கொண்ட பல்கலைக்கழகத்தின் சிறப்புகளை சுட்டிக்காட்டிய துணை வேந்தர், அதன் தற்போதைய செயல்பாடுகளை விளக்கினார். இந்த சந்திப்பின்போது பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் தமது திருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், மாணவர்களின் கல்வித் தரத்தை மட்டுமல்லாமல், பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற பிறகு இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, போதைப்பொருள் மற்றும் புகையிலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கு அடிமையாவதற்கு எதிரான ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், வளாகங்களுக்குள் விளையாட்டு வசதிகள் கிடைப்பதற்கு உரிய முக்கியத்துவம் அளித்து, மாணவர்கள் பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும், இது மாணவர்களிடையே சிந்தனை செயல்முறையின் எல்லையை மேம்படுத்தவும், போட்டி மனப்பான்மையை வளர்க்கவும் உதவும் என்றும் துணைவேந்தருக்கு அவர் அறிவுறுத்தினார்.
பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முயற்சிகள் குறித்து திருப்தி தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், சமகால சூழலில் பொருத்தமான தரமான ஆராய்ச்சி முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். மாணவர்கள் ஆராய்ச்சியை ஒரு தொழில்சார் வாய்ப்பாகத் தொடர ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட பல முக்கியமான முடிவுகள், பல்கலைக்கழக வேந்தரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ், கல்வி நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிப் பாதையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176522
***
(Release ID: 2176522)
SS/BR/KR
(रिलीज़ आईडी: 2176652)
आगंतुक पटल : 19