மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

வங்கிகள், பெருநிறுவனங்கள், பங்குச்சந்தைகள் உள்ளிட்ட 60-க்கும் அதிகமான நிறுவனங்களின் செயல்பாடுகள் காகிதப்பயன்பாடற்ற டிஜிட்டல் நடைமுறையாக மாற்றம் பெற்றுள்ளது

प्रविष्टि तिथि: 08 OCT 2025 3:43PM by PIB Chennai

இந்தியாவில் விரைவான வளர்ச்சிக் கண்டு வரும் டிஜிட்டல் நிர்வாக நடைமுறைகள் எளிதாக வர்த்தகம் செய்வதற்கு உத்வேகம் அளிக்கிறது.

மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய மின்னணு நிர்வாகத்துறை மற்றும் தேசிய மின்னணு நிர்வாக சேவைகள் நிறுவனம் மற்றும் திவால் மற்றும்  நொடிப்பு நிலை வாரியம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் வர்த்தகம் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களில் டிஜிட்டல் ஆவண மேலாண்மை நடைமுறைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்த உதவுகிறது.

கிளவுட் கம்ப்யூட்டிங் அடிப்படையிலான ஆவண மேலாண்மை தளம், டிஜிலாக்கர் செயலி மூலம் ஆவணங்களை வெளியிடுதல், பாதுகாத்தல், பகிர்தல், சரிபார்த்தல் பணிகளை எவ்விதத் தடையுமின்றி மேற்கொள்ள உதவுகிறது.

மேலும், இது காகிதப்பயன்பாடற்ற பாதுகாப்பான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் மின்னணு வடிவிலான வங்கி உத்தரவாதங்கள் உள்ளிட்ட சட்டப்பூர்வ டிஜிட்டல் வடிவிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வகை செய்கிறது.

வங்கிகள், பெருநிறுவனங்கள், பங்குச்சந்தைகள் உள்ளிட்ட 60-க்கும் அதிகமான நிறுவனங்களின் செயல்பாடுகள் காகிதப்பயன்பாடற்ற டிஜிட்டல் நடைமுறையாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176284

 

***

SS/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2176565) आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी