குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

93-வது விமானப்படை தினத்தையொட்டி இந்திய விமானப்படைக்கு குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வாழ்த்து

Posted On: 08 OCT 2025 3:30PM by PIB Chennai

93-வது விமானப்படை தினத்தையொட்டி இந்திய விமானப்படைக்கு குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள திரு சி பி ராதாகிருஷ்ணன், நமது வான்வெளியை பாதுகாப்பது முதல், இயற்கை பேரிடரின் போது உதவுவது வரையிலும் மற்றும் தேவைப்படும் தருணத்தில் உதவி அளிப்பதிலும் இந்திய விமானப்படை நாட்டிற்கு அர்ப்பணிப்புடனும், ஒழுங்குடனும் சேவையாற்றுகிறது.

ஆபரேஷன் சிந்தூர் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் இந்திய ஆயுதப் படைகளின், குறிப்பாக இந்திய விமானப்படையின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்கு, ஒரு சான்றாக திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

துணிச்சல்மிக்க, தொழில்திறனுடைய மற்றும் இணையற்ற அர்ப்பணிப்புடைய விமானப்படை வீரர்களுக்கு திரு சி பி ராதாகிருஷ்ணன் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2176281 )

SS/IR/AG/KR


(Release ID: 2176405) Visitor Counter : 6