திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய திறன் தகுதி குழுவின் 44-வது கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது

Posted On: 08 OCT 2025 10:21AM by PIB Chennai

தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மன்றத்தின் ஆதரவின் கீழ் இயங்கும், தேசிய திறன் தகுதி குழுவின் 44-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகச் செயலாளர் திருமதி தேபஸ்ரீ முகர்ஜி தலைமை தாங்கினார். திறன் தகுதிகளை தேசிய திறன் தகுதி கட்டமைப்புடன்  சீரமைப்பது குறித்து இக்கூட்டத்தில் முக்கியப் பங்குதாரர்கள் விவாதித்தனர்.

சுகாதாரம்,வேளாண்மை, வாகனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மொத்தம் 210 திறன் தகுதிகள் மதிப்பீடு செய்யப்பட்டு, இறுதி ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டன. தேசிய அளவில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை ஒழுங்குபடுத்தும் அமைப்பான தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மன்றம், இந்தத் தகுதிகள் தேசிய திறன் தகுதி கட்டமைப்பு தரநிலைகளுடன் ஒத்துப்போகின்றனவா என்பதை தேசிய திறன் தகுதி குழு மூலம் உறுதி செய்கிறது.

இந்தச் சீரமைப்பு, கற்பவர்கள் ஒரு துறையிலிருந்து மற்றொன்றுக்கு எளிதாக மாறுவதற்கு வழிவகை செய்கிறது. 44வது கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 210 தகுதிகள், நாட்டில் வழங்கப்படும் தொழிற்பயிற்சியின் தரத்தை மேம்படுத்தி, தேசிய மற்றும் உலகளாவிய தொழில் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய, எதிர்காலத்திற்குத் தயாரான திறமையான பணியாளர்களை உருவாக்கவும் உதவுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176098  

***

SS/EA/KR


(Release ID: 2176382) Visitor Counter : 6
Read this release in: English , Urdu , Hindi , Marathi