தேர்தல் ஆணையம்
பீகார் தேர்தலையொட்டி நடத்தை நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
08 OCT 2025 11:57AM by PIB Chennai
பீகாரில் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிக்கையை 2025 அக்டோபர் 06 அன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்புடன் அம்மாநிலத்தில் நடத்தை நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.
பீகார் மாநிலத்திற்கான அறிவிப்புகள் மற்றும் கொள்கை முடிவுகளை பொறுத்தவரை நடத்தை நெறிமுறைகள் மத்திய அரசுக்கும் பொருந்தும். அரசு, பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தலை தடுத்தல், எந்தவொரு அரசியல் கட்சி, வேட்பாளர் அல்லது தேர்தலுடன் தொடர்புடைய வேறு எந்த நபரும் அதிகாரப்பூர்வ வாகனங்கள் அல்லது அரசு தங்குமிடங்களை தவறாகப் பயன்படுத்துதல், அரசு நிதியில் விளம்பரம் வெளியிடுவதைத் தடை செய்தல் தொடர்பான வழிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குடிமக்களின் தனி உரிமை அவசியம் மதிக்கப்பட வேண்டும். தனியார் இல்லங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டமோ அல்லது மறியலோ நடத்தக் கூடாது. உரிமையாளர்களின் ஒப்புதலின்றி கொடி, பதாகைகள் அல்லது சுவரொட்டிகளுக்காக நிலம், கட்டிடம் அல்லது சுவர்களை பயன்படுத்தக் கூடாது. விதிகளை மீறுவது குறித்து புகார்களை பதிவு செய்வதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அல்லது அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இதில் புகார் அளிக்கலாம். அத்துடன் சி-விஜில் செயலி மூலமும் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகார் பெறப்பட்ட 100 நிமிடங்களுக்குள் அது குறித்து விசாரிக்க 824 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் குறித்து முன்கூட்டியே காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்குமாறு அரசியல்கட்சிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176143
***
SS/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2176256)
आगंतुक पटल : 83