பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராம் விலாஸ் பாஸ்வானின் புண்ணிய திதியையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தினார்

प्रविष्टि तिथि: 08 OCT 2025 10:01AM by PIB Chennai

பீகார் மாநிலத்தின் பிரபல அரசியல் கட்சி தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வானின் புண்ணிய திதியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பீகார் மாநிலத்தின் பிரபல அரசியல் கட்சி தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான், சமூக நீதியின் அடையாளமாகவும் பொதுச் சேவையில் அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயலாற்றியவர். அவர் மறைந்த புண்ணிய திதியில் மனமாற மரியாதை செலுத்துகிறேன். நலிவடைந்த மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மேம்பாட்டிற்காகவும் அவர் அயராது பணியாற்றியவர். அரசியல் மற்றும் நாட்டைக் கட்டமைப்பதில் அவர் அளித்த பங்களிப்பு என்றென்றும் நினைவு கூரப்படும்.” 

*************


(Release ID: 2176089)

SS/SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2176161) आगंतुक पटल : 41
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam