கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'தூய்மையே சேவை' பிரச்சாரம் மத்திய கலாச்சார அமைச்சகத்தால் வெற்றிகரமாக நடத்தபட்டது.

Posted On: 07 OCT 2025 11:07AM by PIB Chennai

மத்திய கலாச்சார அமைச்சகம், நாடு தழுவிய 'தூய்மையே சேவை' பிரச்சாரத்தில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2, 2025 வரை தீவிரமாகப் பங்கேற்றது. அமைச்சகத்தின் கீழ் உள்ள 43 நிறுவனங்கள் மற்றும் கலாச்சார அமைப்புகளில் தொடர்ச்சியான தூய்மை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தது. இந்தப் பிரச்சாரத்தில் பணியாளர்கள், மாணவர்கள், கலாச்சார அமைப்புகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இப் பிரச்சாரத்தின் முக்கிய சாதனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • 260 தூய்மை இலக்கு அலகுகள் அடையாளம் காணப்பட்டு மேம்படுத்தப்பட்டன.

 

  • 'தூய்மையான பொது இடங்கள்' நிகழ்வுகளுக்காக 39 பொது இடங்கள் அடையாளம் காணப்பட்டு, பிரச்சாரத்தின் போது சுத்தம் செய்யப்பட்டன.

 

  • தூய்மையின் செய்தியைப் பரப்ப, இரண்டு 'தூய்மைப் பேரணிகள்' மற்றும் இரண்டு 'ஒருமுறை உபயோகிக்கும் நெகிழிக்கு மறுப்பு’ இயக்கங்கள் உட்பட நான்கு பரப்புரை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

 

  • 'தூய்மையான பசுமைத் திருவிழா' என்ற கருப்பொருளின் கீழ் தூய்மை ரங்கோலி போட்டி நடைபெற்றது.

 

  • தூய்மைப் பணியாளர்களுக்கான நான்கு சுகாதாரப் பரிசோதனை முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்களில் மொத்தம் 977 தூய்மைப் பணியாளர்கள் அரசுத் திட்டங்களின் கீழ் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

 

  • நாடு முழுவதும் உள்ள அமைப்புகளால் தூய்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது.

 

  • பணியாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சுவரொட்டி வரையும் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி போன்றவை நடத்தப்பட்டன.

 

  • 'ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒரு சேர' பிரச்சாரத்தின் கீழ், செப்டம்பர் 25, 2025 அன்று மரம் நடும் இயக்கம் மற்றும் தன்னார்வ இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

  • செப்டம்பர் 25, 2025 அன்று புராணா கிலாவில் தூய்மை நண்பர்களுக்கு சுகாதாரக் கருவிகள் வழங்கப்பட்டன.

 

  • தேசிய அறிவியல் மையம், மறுசுழற்சி மற்றும் கழிவுப் பொருட்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துதல் என்ற கருத்தை ஊக்குவிக்க 'கழிவுகளில் இருந்து கலை' என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கத்தை (2025 செப்டம்பர் 30 – 2025 அக்டோபர் 1) ஏற்பாடு செய்தது.

 

இப்பிரச்சாரம் கலாச்சார நிறுவனங்கள் மற்றும் பாரம்பரிய தளங்களில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தியதுடன், தூய்மையான மற்றும் பசுமையான பாரதத்தை நோக்கிய நிலைத்தன்மை மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வு பற்றிய பொது விழிப்புணர்வையும் பரப்ப உதவியது

#SwachhtaHiSeva #CultureForCleanliness

***

(Release ID: 2175649)

SS/EA/SH


(Release ID: 2175968) Visitor Counter : 6