தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வரைவு விதிகள் குறித்த கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
Posted On:
07 OCT 2025 10:42AM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தொலைத் தொடர்பு (ஒலிபரப்பு மற்றும் கேபிள்) சேவைகளுக்கான வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இம்மாதம் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று டிராய் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த வரைவு விதிமுறைகள் குறித்த கருத்துக்களை தெரிவிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் இம்மாதம் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் அறிவித்துள்ளது.
இதை தவிர கால அவகாசம் கோரும் எந்தவொரு கோரிக்கையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று டிராய் தெரிவித்துள்ளது.
இந்த வரைவு விதிமுறைகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை மின்னணு படிவம் வாயிலாக advbcs-2@trai.gov.in மற்றும் jtadv-bcs@trai.gov.in என்ற முகவரியிலும் தெரிவிக்கலாம். மேலும் இது குறித்த விவரங்கள் மற்றும் தகவல்களுக்கு இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய ஆலோசகர் (ஒலிபரப்பு & கேபிள் சேவைகள்) டாக்டர் தீபாலி சர்மா அல்லது இணை ஆலோசகர் (ஒலிபரப்பு & கேபிள் சேவைகள்) செல்வி சப்னா சர்மா ஆகியோரை முறையே +91-11-20907774 அல்லது +91-11-26701418 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
(Release ID: 2175644)
SS/SV/AG/KR
(Release ID: 2175814)
Visitor Counter : 5