குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
உலக பாரா தடகளச் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
06 OCT 2025 6:54PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற உலக பாரா தடகளச் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 22 பதக்கங்களை வென்றதன் மூலம், தங்களது நெகிழ்தன்மை, உணர்வு மற்றும் உறுதிப்பாட்டினால் பாரா தடகள வீரர்கள் நாட்டு மக்களை ஊக்குவித்திருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இந்த சாதனை நாட்டிற்கு பெருமிதம் சேர்ப்பதுடன், இந்தியாவில் பாரா விளையாட்டுகளின் எதிர்கால வளர்ச்சிக்கு வலிமையான அடித்தளமாகவும் அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார். விளையாட்டுத்துறையில் உள்ளடக்கம் மற்றும் சிறந்த செயல்பாட்டை இந்த சாதனை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சமூக ஊடக தள பதிவு ஒன்றில் குடியரசுத் துணைத் தலைவர் கூறியிருப்பதாவது:
“உலக பாரா தடகளச் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள். நமது மண்ணில் சாதனை எண்ணிக்கையான 22 பதக்கங்களை வென்றிருக்கும் நம் பாரா தடகள வீரர்கள், தங்களது நெகிழ்தன்மை, உணர்வு மற்றும் அர்ப்பணிப்பினால் நாட்டு மக்களை ஊக்குவித்திருக்கிறார்கள்.
இந்த சாதனை நாட்டிற்குப் பெருமிதம் சேர்ப்பதுடன், இந்தியாவில் பாரா விளையாட்டுகளின் எதிர்கால வளர்ச்சிக்கு வலிமையான அடித்தளமாகவும் அமைந்துள்ளது. விளையாட்டில் உள்ளடக்கம் மற்றும் சிறந்த செயல்பாட்டை இது மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.”
(Release ID: 2175513)
***
SS/BR/SH
(Release ID: 2175609)
Visitor Counter : 6