குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்துடன் குடியரசுத் துணைத் தலைவர் சந்திப்பு
Posted On:
06 OCT 2025 7:16PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்தை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
திரு ராம் நாத் கோவிந்த், தலைசிறந்த அரசியல் மேதை என்றும், நாட்டின் 14-வது குடியரசுத்தலைவராக மற்றும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்த உயர்நிலைக் குழுவின் தலைவராக அவர் ஆற்றிய பணிகளும், சமூக நீதி மற்றும் மக்கள் நலனில் அவர் வாழ்நாள் முழுவதும் கொண்டுள்ள உறுதிப்பாடும், நமது அரசியலமைப்பின் கொள்கைகள் மீதான அவரது உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன என்று சமூக ஊடக தளத்தில் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டிருந்தார். திரு ராம் நாத் கோவிந்தின் வழிகாட்டுதல்களும், அரசியல் மேதைமையும் தலைசிறந்த மாண்பின் ஆதாரமாகத் தொடர்ந்து நீடிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
(Release ID: 2175528)
***
SS/BR/SH
(Release ID: 2175571)
Visitor Counter : 7