இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தினத்தையொட்டி ஒற்றுமை பேரணியை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கிவைத்தார்
Posted On:
06 OCT 2025 5:23PM by PIB Chennai
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தினத்தையொட்டி ஒற்றுமை பேரணியை மத்திய இளைஞர் நலன், விளையாட்டுக்கள், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சேவுடன் இணைந்து இன்று தொடங்கி வைத்தார். ஒற்றுமை, தேசபக்தி மற்றும் குடிமைப் பொறுப்பு ஆகியவற்றை இளைஞர்களிடையே ஊக்குவிக்கும் நோக்கிலும், இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் படேலை கௌரவிக்கும் வகையிலும், அன்றாட வாழ்க்கையில் ‘ஒரே பாரதம், தற்சார்பு இந்தியா’ என்ற சிந்தனையை ஊக்குவிக்கும் வகையிலும் இரண்டு மாதங்கள் இப்பேரணி நடைபெறும்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் நாட்டின் கட்டமைப்பில் மக்கள் பங்கேற்பு என்ற தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, மை பாரத் மூலம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படும் வளர்ச்சியடைந்த இந்தியா பாதயாத்திரைகள், தேசியப் பெருமையை வளர்த்தல், ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவது மற்றும் இளைஞர்களிடையே குடிமை ஈடுபாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நாடு தழுவிய முன்முயற்சிகளாகும். சர்தார்@150 ஒற்றுமை பேரணியும் இந்த விரிவான தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175419
***
SS/IR/AG/SH
(Release ID: 2175522)
Visitor Counter : 5