பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
இந்திய ஆராய்ச்சி சுற்றுலா 2025-ஐ மத்திய இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாகூர் தொடங்கி வைத்தார்
Posted On:
06 OCT 2025 2:52PM by PIB Chennai
புதுதில்லியில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி குழுமத்தில் இந்திய ஆராய்ச்சி சுற்றுலா 2025-ஐ மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாகூர் முறைப்படி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து ஸ்பிரிங்கர் நேச்சர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்திய ஆராய்ச்சி சுற்றுலா என்பது ஆராய்ச்சியில் ஒருங்கிணைப்பு, உள்ளடக்கம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நாட்டின் மிக முக்கிய மக்கள் தொடர்பு முன் முயற்சியாகும். வெளிப்படையான அணுகுமுறை, ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு, பன்முகத்தன்மை, உள்ளடக்கம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி ஏழு மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள 29 நிறுவனங்களுக்கு இந்த சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய திருமதி சாவித்திரி தாகூர், அறிவு, ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்புகள் மூலம் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். நாடு முழுவதும் ஆராய்ச்சியாளர்களை இணைப்பதற்கான தளமாக இந்திய ஆராய்ச்சி சுற்றுலா திகழ்கிறது என்று கூறினார்.
இது, ஆராய்ச்சியில் பெண்களுக்கு ஆதரவு அளிக்கிறது, வாய்ப்புகள் மற்றும் வளங்களுக்கு சமமான அணுகலை உறுதி செய்கிறது. பெண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்களை மேம்படுத்துவது உள்ளடக்கிய அறிவுப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான மையமாக உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175310
***
SS/IR/AG/SH
(Release ID: 2175491)
Visitor Counter : 5