புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் ஃபின்டெக் திருவிழா 2025 அக்டோபர் 7 அன்று தொடங்குகிறது

Posted On: 06 OCT 2025 2:26PM by PIB Chennai

மும்பையில் ஜியோ உலக மையத்தில் 2025 அக்டோபர் 07 முதல் 09 வரை நடைபெறவுள்ள உலகளாவிய ஃபின்டெக் திருவிழா 2025-ல் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் பங்கேற்கிறது. அங்கு அமைக்கப்படவுள்ள அரங்குகளும், நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளும் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின் வளர்ந்து வரும் சூழலையும் தரவு இடைவெளிகளை இணைக்க ஃபின்டெக்கின் பங்களிப்பையும் எடுத்துரைக்கும்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சகத்தின் அரங்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நுகர்வோர் விலைக் குறியீடு, முக்கிய தொழிலாளர் சந்தை புள்ளிவிவரங்கள் போன்ற முக்கிய புள்ளிவிவர குறியீடுகள் இடம்பெறும். இது அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் வெளிப்படைத்தன்மை, அணுகல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புக்கான அதன் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. இன்போ கிராபிக்ஸ், வீடியோக்கள் உள்ளிட்ட படைப்பு காட்சிகள் பார்வையாளர்களை ஈடுபடுத்தவும், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் முன்முயற்சிகளை திறம்பட வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படும். உலகளாவிய ஃபின்டெக் திருவிழாவில் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி வெற்றி பெறும் என்று நாம் நம்புகிறோம்.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தொழில்துறை நுண்ணறிவு மற்றும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை எதிர்நோக்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175298   

***

SS/IR/AG/KR


(Release ID: 2175391) Visitor Counter : 8