ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புற வாழ்விடங்களின் நில ஆய்வு (நக்ஷா) திட்டம் குறித்த இரண்டு நாள் தேசிய பயிற்சி தொடங்கியது

Posted On: 06 OCT 2025 2:15PM by PIB Chennai

லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக மையம், ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின்  நிலவளத்துறையுடன் இணைந்து நகர்ப்புற வாழ்விடங்களின் தேசிய புவி அறிவுசார் நில ஆய்வு (நக்ஷா) திட்டம் குறித்த இரண்டு நாள் தேசிய பயிற்சி மற்றும் பயிலரங்கை இன்று தொடங்கியது. இந்த சிறப்புமிக்க நகர்ப்புற நிலவள திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர்களை இந்த முன்முயற்சி ஒன்றிணைக்கிறது.

டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் ஓராண்டு முன் முயற்சியாக நக்ஷா திட்டம் உள்ளது. மேம்படுத்தப்பட்ட நில வரைபடம் மற்றும் தரவு பகுப்பாய்வின் ஒருங்கிணைப்பின் மூலம் நகர்ப்புற நில நிர்வாகத்தை அணுகுதல், திறன், வெளிப்படை தன்மை ஆகியவற்றை கொண்டு வருவதை இது நோக்கமாக கொண்டுள்ளது.

நில உரிமையில் உள்ள தெளிவின்மையை நீக்குவது, சொத்து வரிவிதிப்பைச் சீரமைப்பது மற்றும் எதிர்கால நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதை நக்ஷா திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த முன்முயற்சி, 'ரே நாடு, ரே நில ஆவணம்' என்ற மாற்றத்தக்க நடவடிக்கையை  குறிக்கிறது. நகர்ப்புற நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் டிஜிட்டல் முறையில் வரைபடமாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175292  

***

SS/IR/AG/KR


(Release ID: 2175389) Visitor Counter : 10