நிலக்கரி அமைச்சகம்
அருணாச்சல பிரதேசத்தில் முதல் வணிக நிலக்கரி சுரங்கம் உற்பத்தியை தொடங்குகிறது
Posted On:
05 OCT 2025 1:06PM by PIB Chennai
அருணாச்சல பிரதேசம் 2025 அக்டோபர் 6 அன்று நாம்சிக்-நாம்புக் நிலக்கரி தொகுதியில் தனது முதல் வணிக நிலக்கரி சுரங்கம் உற்பத்தியை தொடங்கி வரலாற்று சிறப்புமிக்க நாளைக் காணவுள்ளது.
இது வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உள்ளூர் செழிப்பின் புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. மத்திய அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி பூமி பூஜை செய்து, சுரங்க குத்தகையை வழங்குவார். பின்னர் சிபிபிஎல்-ன் கருவிகள் மற்றும் இயந்திரங்களைக் கொடியசைத்து அனுப்பிவைப்பார். இறுதியாக 100 மரங்கள் நடும் நிகழ்ச்சியில் அமைசச்சர் பங்கேற்கிறார்.
1.5 கோடி டன் இருப்புகளைக் கொண்ட நாம்சிக் நாம்புக் நிலக்கரி தொகுதி 2003-ல் முதன்முதலில் ஒதுக்கப்பட்டது, ஆனால் பல சவால்கள் காரணமாக நீண்ட தாமதங்களை எதிர்கொண்டது. 2022-ல் வெளிப்படையான ஏல செயல்முறை மூலம் இது புத்துயிர் பெற்றது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வடகிழக்கு இந்திய பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற மாற்று பார்வையை இது முன்னெடுக்கிறது.
இந்த சுரங்கம் மாநிலத்திற்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடிக்கும் மேலான வருவாயை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலைகளையும் செழிப்பையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடக்கம் சட்டவிரோத சுரங்கம், சுரண்டல் மற்றும் மாநில வளங்கள் வீணடைவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் குறிக்கிறது. அருணாச்சலில் முதல்முறையாக இரண்டு தொகுதிகளும் அஸ்ஸாமில் ஐந்து தொகுதிகளும் ஏலத்தில் விடப்பட்டு முக்கியமான கனிமங்கள் உற்பத்திக்கு திறக்கப்படுகின்றன. கடந்த 11 ஆண்டுகளில், வடகிழக்கில் ரூ.6 லட்சம் கோடிக்கும் மேலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. அருணாச்சலபிரதேச மாநிலத்தில் மட்டும், 2014க்கு முன் முதலீடு ரூ.6,000 கோடியிலிருந்து 2014க்குப் பின் ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174956
***
AD/VK/RJ
(Release ID: 2175141)
Visitor Counter : 4