மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
34 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 15,000 மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகள், தொடர்ச்சியான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
04 OCT 2025 1:17PM by PIB Chennai
மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின், மீன்வளத் துறை, 2025 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஏற்பாடு செய்த நாடு தழுவிய தொடர் மெய்நிகர் வழியிலான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 15,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகள் பங்கேற்றனர். மீன்வளத்துறையின் செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள், பங்குதாரர்கள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்த ஒரு நேரடி தளத்தை அமைத்துத் தந்தது. மீனவர்கள், மீன் விவசாயிகள், மீன்வள சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள், மீன்வள விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள் (FFPOs), புத்தொழில் நிறுவனங்கள், மீன்வளத் துறையின் துணை அலுவலகங்கள் முதலியவை, ஆறு மாதங்கள் நடைபெற்ற காணொலிக் காட்சி வாயிலான கலந்துரையாடல்களில் பங்கேற்றன.
இந்த முன்முயற்சி தற்போதைய சவால்களை அடையாளம் காண உதவியதுடன், எதிர்கால கொள்கை தலையீடுகள், உள்கட்டமைப்புத் திட்டமிடல் மற்றும் மீன்வளர்ப்புத் துறைக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நலத்திட்டங்களை வடிவமைக்க கருத்துக்களை சேகரிக்கவும் உதவியது. மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகள், தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பகிர்ந்து கொண்ட அதே வேளையில், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் மின் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கூட்டு விபத்து காப்பீட்டுத் திட்டம், கடல்சார் புரட்சி மற்றும் கிசான் கடன் அட்டை போன்ற அரசு திட்டங்களின் கீழ் தாங்கள் பெற்ற ஆதரவிற்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174726
*****
AD/BR/SG
(रिलीज़ आईडी: 2174751)
आगंतुक पटल : 38