பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
மத்திய அரசு மிசோரம் கிராம சபைகளுக்கு 15-வது நிதிக்குழு மானியமாக ரூ.14.40 கோடியை விடுவித்துள்ளது
Posted On:
03 OCT 2025 4:09PM by PIB Chennai
நடப்பு 2025–26-ம் நிதியாண்டில் மிசோரம் மாநிலத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக, 15-வது நிதிக்குழுவின் தொகுப்பற்ற மானியத்தின் இரண்டாம் தவணையாக ரூ.14.40 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மேலும், 2023–24-ம் நிதியாண்டிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொகுப்பற்ற மானியத்தின் முதல் தவணையின் நிலுவைத் தொகையான ரூ.0.1209 கோடியையும் விடுவித்துள்ளது. இந்த மானியங்கள் மாநிலத்தில் உள்ள தகுதியுடைய 808 கிராம சபைகளுக்கும் பயனளிக்கும். முன்னதாக, ஆகஸ்ட் 2025-இல், 2023–24-ம் ஆண்டு மானியங்களின் ஒரு பகுதியாக, தகுதியுடைய 827 கிராம சபைகளுக்காக மிசோரம் மாநிலம் ரூ.14.2761 கோடியைப் பெற்றிருந்தது.
பஞ்சாயத்து ராஜ் மற்றும் நீர்வள அமைச்சகங்களின் மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்காக 15-வது நிதிக்குழுவின் மானியங்களை விடுவிக்க மத்திய அரசு, மாநிலங்களுக்கு பரிந்துரை செய்து, நிதியமைச்சகத்தின் மூலம் நிதி விடுவிக்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட மானியங்கள், நிதியாண்டில் 2 தவணைகளாக விடுவிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொகுப்பற்ற மானியங்களை, சம்பளம் மற்றும் இதர செலவுகள் தவிர, அரசியல் சாசனத்தின் 11-வது பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி, அந்தந்தப் பகுதிகளின் தேவைகளுக்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகளும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளும் பயன்படுத்தும். தொகுப்பு மானியங்கள், தூய்மைக்கான அடிப்படை சேவைகள், திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையைப் பராமரித்தல் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படும். இதில் வீட்டுக் கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் சுத்திகரித்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளது. குறிப்பாக மனிதக் கழிவுகளை அகற்றுதல், குடிநீர் விநியோகம், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி ஆகியவற்றுக்காக தொகுப்பு மானியங்கள் பயன்படுத்தப்படலாம்.
***
AD/SE/SH
(Release ID: 2174655)
Visitor Counter : 6