குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளை முன்னிட்டு ராஜ்காட்டில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர் மரியாதை செலுத்தினார்
Posted On:
02 OCT 2025 6:26PM by PIB Chennai
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு புதுதில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு நடைபெற்ற சர்வ சமய பிரார்த்தனையிலும் கலந்து கொண்டார்.
தேசப்பிதாவின் வாழ்க்கையும் போதனைகளும் மனிதகுலத்திற்கு உண்மை, அன்பு மற்றும் தன்னலமற்ற சேவையின் பாதையைக் காட்டின என்று ஒரு சமூக ஊடகப் பதிவில் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சமூகத்தில் பலவீனமானவர்கள் மற்றும் ஏழைகளின் முன்னேற்றத்திற்காக உதவுவதில் காந்திஜி கொண்டிருந்த முக்கியத்துவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் புதுதில்லியில் உள்ள விஜய் காட் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் இன்று மாலை புது தில்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் தேசப்பிதா மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களுக்கும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் 'கர்மவீரர்' திரு கே. காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கும் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
***
(Release ID: 2174224)
SS/SMB/SH
(Release ID: 2174279)
Visitor Counter : 4