எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய எஃகு ஆணைய நிறுவனம் ஜம்மு-காஷ்மீர் இந்திய மேலாண்மை நிறுவனத்துடன் ஒப்பந்தம்

Posted On: 30 SEP 2025 1:28PM by PIB Chennai

எதிர்கால தலைமைத்துவத்தை உருவாக்கும் வகையில் இந்திய எஃகு ஆணைய நிறுவனம் தமது மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் ஜம்மு காஷ்மீர் இந்திய மேலாண்மை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் புதுதில்லியில் இஸ்பத் பவனில் உள்ள இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 2025 செப்டம்பர் 29 அன்று முறைப்படி கையெழுத்தானது.

மாறிவரும் வர்த்தக சூழலுக்கு திறமையான தலைவர்களை உருவாக்குவதற்கான இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தின் உறுதிப்பாட்டிற்கு  ஏற்ப, இந்த ஒத்துழைப்பு நிறுவனத்தின் திறனை வலுப்படுத்துவதற்கும், உலகளாவிய சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கும், தலைமைத்துவ திறன் மூலம் நாட்டை கட்டமைப்பதற்கும் ஒரு முக்கிய படியாகும்.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய எஃகு ஆணைய நிறுவனம், மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் செயல் இயக்குநர் திரு சஞ்சய் தர், ஜம்மு இந்திய மேலாண்மை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கேசவன் பாஸ்கரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

***

(Release ID: 2173021 )

SS/IR/AG/SH

 


(Release ID: 2173301) Visitor Counter : 6
Read this release in: English , Urdu , Hindi