ஆயுஷ்
azadi ka amrit mahotsav

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருந்தியல் ஆணையம் அலுவலகத்தில் இருவார கால இந்தி கொண்டாட்டங்கள்

Posted On: 30 SEP 2025 2:26PM by PIB Chennai

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருந்தியல் ஆணையம் அலுவலகத்தில் இருவார கால இந்தி கொண்டாட்டம் செப்டம்பர் 14 முதல் 29, 2025 வரை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தி திவாஸ் அன்று தொடங்கிய இந்த கொண்டாட்டத்தில், கட்டுரைப் போட்டி, விவாதம், கவிதை எழுதுதல் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன.

செப்டம்பர் 25 அன்று, தன்வந்திரி அரங்கில் ஒரு சிறப்பு இந்தி கவிதை கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருந்தியல் ஆணையம் இயக்குநர் டாக்டர் திரு ரமண் மோகன் சிங் இதற்கு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக வந்த கவிஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

ஆயுஷ் அமைச்சகத்தின் முன்னாள் தலைமை வேதியியலாளர் டாக்டர் ஜி.பி. கார்க் தலைமையில் செப்டம்பர் 29 அன்று நிறைவு விழா நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பில் இந்தி மொழியின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியது.


மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2173073

***

(Release ID: 2173073)

SS/SE/RJ


(Release ID: 2173236) Visitor Counter : 6
Read this release in: English , Punjabi , Urdu , Hindi