தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்பு துறையின் சஞ்சார் சாத்தி நடவடிக்கைகள் மூலம் 6 லட்சத்திற்கும் அதிகமான தொலைந்த மற்றும் களவு போன மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
30 SEP 2025 12:36PM by PIB Chennai
தொலைந்த மற்றும் களவு போன மொபைல் சாதனங்கள் குறித்த புகார்களை பதிவு செய்யும் வகையில் மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் பாதுகாப்பு முயற்சியாக சஞ்சார் சாத்தி என்ற வசதியை தொலைத்தொடர்புத்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த செயலி வாயிலாக இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான தொலைந்த மற்றும் களவு போன மொபைல் சாதனங்கள் மீட்கப்பட்டுள்ள.
இது டிஜிட்டல் நிர்வாகத்தின் மேல் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், டிஜிட்டல் சாதனங்களை சைபர் குற்றங்கள் போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும். ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தின் வலிமையை இது வெளிப்படுத்துகிறது. களவாடப்பட்ட அல்லது தொலைந்த மொபைல் சாதனங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதில் இருந்து பாதுகாக்க நாடு முழுவதும் தொலைத்தொடர்பு வலையமைப்பை பயன்படுத்தி அந்த சாதனங்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும், அது தொடர்பாக புகார் அளிக்கவும் இது வகை செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2172989
***
SS/SV/RJ
(रिलीज़ आईडी: 2173228)
आगंतुक पटल : 27